Tuesday, 16 August 2011

சித்திரவதை செய்யாதே.....

உன்னை மறக்க நினைக்கும் 
போது தான் அதிகமாக 
நினைக்கிறேன்....

உன்னை வெறுக்க நினைக்கும் 
போது தான் அதிகமாக 
நேசிக்கிறேன்.....

உன்னை விட்டு விலக துடிக்கிறேன் 
ஆனால் ஏனோ தெரியவில்லை 
முன்பை விட அதிகமாய் என் 
மனதினை நெருங்குகிறாய் ....

உன் நினைவுகளை அழிக்க நினைக்கயில்,
இரவில் விண்ணை ஆட்கொண்டிருக்கும் 
நட்சத்திரகளை போல உன் நினைவுகள் 
என்னை ஆட்கொள்கிறது....

என்னை கொன்று விடு அல்லது 
வாழ விடு ஆனால் என்னை 
இப்படி சித்திரவதை செய்யாதே.....

உன்னை மன்றாடி கேட்கிறேன் 
உன்னை உண்மையாக நேசித்த 
குற்றத்திற்காகவாது விட்டுவிடு 
அன்பே.....!!!!!!!  

Saturday, 30 July 2011

உபதேசம்

ஊரை அடித்து உலையில் போடும் ஊழல் அரசியல்வாதி
வறுமையில் பிச்சை எடுக்கும் பிட்சைகரானுக்கு உபதேசம் செய்கிறான்
" உழைத்து சாப்பிடு " என்று......!!!!

மையபுள்ளி


உன்னை மையபுள்ளியாய் கொண்டே 
என் உலகம் சுற்றுகிறது....

உன்னை மையபுள்ளியாக கொண்டு 
சுற்றும் என் உலகில் நான் சுவாசிக்கும் 
மூச்சும் நீ தான், என் மகிழ்ச்சியும் தான்...

உன்னை மையபுள்ளியாக கொண்டு 
சுற்றும் என் உலகில் சோகம் என்னும் 
பேச்சுக்கு இடமில்லை.....
 
உன்னை மையபுள்ளியாய் கொண்டு 
என் உலகம் சுற்றுவதால் தான் நான்
இன்றளவும் உயிருடன் இருக்கிறேன்....!!!!!!

Friday, 15 July 2011

கலைநயத்துடன் சிறை

கலைஞர் குடும்பத்தாரையும் தி.மு.க வை சார்ந்தவர்களையும் அடைபதர்க்காகவே
அனேகமாக தமிழகத்தில் புதியதாக ஒரு சிறை கட்ட வேண்டி இருக்கும் போல.
இப்படி ஒரு நிலை தி.மு.க விருக்கு நிகழும் என்று கலைஞர்கு முன்பே தெரிந்து
இருந்தால் புதிய சட்டமன்றம் கட்டியதற்கு பதிலாக நவீன வசதிகளுடன் புதிதாக
ஒரு சிறையை கலைநயத்துடன் அவசரமாக கட்டி முடித்து இருப்பார்.

Sunday, 10 July 2011

தேடல்

பொய் இல்லாத நட்பு,
 சுயநலம் இல்லாத உறவுகள், 
கள்ளம் இல்லாத காதல், 
உண்மையானஅன்பு, 
இவைகளை தேடியே மனம் மரத்து போகின்றது . 
மனம் மரத்துபோனாலும் தேடல்
தொடர்கிறது.... 
தேடி தேடி மனம் மரத்து மடிந்தாலும் தேடல் மட்டும் தீராமல்
முடிவில்லா தொடர்கதையாய் தொடர்கிறது ....

Saturday, 9 July 2011

கலைஞர் ஒரு தீர்க்கதரிசி

உண்மையில் கலைஞர் ஒரு தீர்க்கதரிசி தான் ,
ஆட்சி மாறினால் குடும்பமே சிறை செல்ல
நேரும் என்று தெரிந்து தான் புழல் சிறையில்
அசைவ உணவிற்கும் மின்விசிரிகும் ஏறுபாடு
உத்தரவு பிறபித்தார் போலும்.....!!!!!
நல்ல காலம் கலைஞர் மாநில முதல்வர்
பதவியில் இருந்தார் ஒருவேளை
பிரதமர் பதவியில் இருந்து இருந்தால்
திகார் சிறைக்கும் அசைவ உணவு
மின்விசிறி எல்லாம் வழங்க உத்தரவு
பிறப்பித்து இருப்பார்...... :லொல்:  :லொல்:  :லொல்:

Monday, 20 June 2011

நண்பர்களை வரவேற்கிறேன்


அன்பின் இனிய நட்பு உள்ளங்களே உங்கள அனைவரையும் எனது புதிய வலைபூவிற்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறேன் . உங்கள் அனைவரையும் எனது வலைப்பூவிற்கு வரவேற்ப்பதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். எழுதுவதில் துளி ஆர்வம் கொண்டுள்ள விஜயலட்சுமி என்னும் நான் தமிழ்நங்கை என்னும் புனை பெயரில் எனது எழுத்துகளை இந்த புதிய வலைப்பூவில் பதிவு செய்திட எண்ணம் கொண்டுள்ளேன் ஆதலால் மனதிற்கு இனிய எனது நட்பு உள்ளகளை எனது எழுத்துகள் நன்றாக இருக்கும் தருனகளில் என்னை ஊக்குவித்தும் நான் தவறு செய்யும் போது என்னை தலையில் குட்டு வைத்து என் தவறினை திருத்தி என்னை வழிநடத்தும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....

எனது இனிய நட்பு உள்ளங்களுக்கு அடிற்கானும் கவிதை சமர்ப்பணம் 

என் நண்பர்களை போல் தலைச்சிறந்த
அழகிய கவிதைகள் இந்த பிரபஜத்தில்
இல்லை,,,,
ஏன்னெனில் அவர்களின் அன்பிற்கு
மட்டுமே உயிரில்ல ஜடப்பொருளுக்கும்
உயிர் கொடுக்கும் அபார சக்தி
இருக்கிறது.....!!!!!

என் நண்பர்களை போன்ற தலைச்சிறந்த
அழகிய ஓவியங்களும் இந்த பிரபஜத்தில்
இல்லை,,,,
ஏன்னெனில் அவர்களின் அன்பிற்கு
மட்டுமே கண்ணில்லா குருடனுக்கும்
காட்சிகளை கொடுக்கும் அபார சக்தி
இருக்கிறது......!!!!!

இன்றும்,
என்றும்,
என்றென்றும்
அன்புடன் 

தமிழ்நங்கை (விஜயலட்சுமி)